ராமநாதபுரம் பரமக்குடியில் சூரியமின்சக்தி பூங்காவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் ராசி கிரீன் எர்த் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையே இன்று
ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி பரமக்குடியில் அமைய உள்ள சூரிய மின்சக்தி
பூங்காவில், 100 மெகாவாட் மின்னுற்பத்தி நடக்கும். 500 ஏக்கர் பரப்பளவில்,
ரூ.920 கோடி முதலீட்டில், இந்த பூங்கா அமைக்கப்படும். ஓராண்டில்
மின்னுற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தில், 2
ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அரசு மற்றும் தனியார் கூட்டுடன்
இந்தியாவில் அமையும் முதல் சூரிய ஒளிமின்சக்தி பூங்கா இது.
மேலும் கடந்த மாதம் சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்ட பின்னர் தமிழக
அரசு எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவும் இது அமைகிறது. இது தொடர்பாக
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழிற்வளர்ச்சி நிறுவன
நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும், ராசி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின்
தலைவர் நரசிம்மனும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இதேபோன்று தனியார் - அரசு கூட்டுடன், மேலும் பல சூரிய
ஒளிமின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் அமையும் என்றும் தமிழக அரசு
நம்பிக்கை தெரிவித்துள்ளது
-பசுமை நாயகன்